Posts

Showing posts from May, 2019

செல்போன் எனப்படும் கைத்தொலைபேசியிலிருந்து வரும் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகள்.

Image
செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ? செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது. ஏனெனில், செல்போன் பயன் படுத்தாவிட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்கவே செய்யும். குருவிகள் இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன. இந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது நமக்கும் நமது குடுமபம் மற்றும் சந்ததியினருக்கும் சிறந்த விடயமாக இருக்கும். இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் ...

நேரலை சேவைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பேஸ்புக்!

Image
நியூசிலாந்து – கிறிஸ்ட்சேர்ச் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் அதன் நேரலை சேவைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் கடந்த மார்ச் 1 ஆம் திகதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டை பயங்கரவாதிகள் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக வெளியிட்டனர். இதனையடுத்து, இணையத்தில் இதுபோன்ற வன்முறை செயல்கள் தொடர்பான நேரலைகளைக் கட்டுப்படுத்துமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், பேஸ்புக் பக்கத்தில் ஒருமுறை விதிமீறலில் ஈடுபடுவோருக்கு நேரலை செய்ய தற்காலிகத் தடை விதிக்கப்படும் என்று அந்நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், விதிமீறலின் தன்மைக்கு ஏற்றவாறு தடையின் காலம் நீடிக்கப்படலாம் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் விரைவில் எல்லா நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பகிரப்படும் வன்முறை தொடர்பான காணொளிகளைத் தடை செய்வது குறித்து பாரிசில் உலகத் தலைவர்கள் சந்தித்துப் பேசவிருக்...

தொடர்ந்து மெசேஜ் செய்பவர்களை தாக்கும் புதிய நோய் – மருத்துவர்கள் எச்சரிக்கை!

Image
இன்றைய இளைஞர்கள் கைகளில் வலம்வரும் ஸ்மார்ட்போன் பல செயல்களை செய்கிறது. குறிப்பாக, எந்த நேரமும் யாருக்காவது வெட்டியாக மெசெஜ் செய்வது, அரட்டை அடிப்பது என விரலுக்கு வீக்கத்தை கொடுக்கும் ஸ்மார்ட்போன், நோயையும் அள்ளிக் கொடுக்கிறது. தொடர்ந்து டெக்ஸ்ட் செய்துகொண்டே இருக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு ‘ஸ்மார்ட்போன் தம்ப்’ எனப்படும் நோய் தாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் கட்டை விரல்கள் பலவீனமடைந்து அழற்சிகள் ஏற்படும் எனவும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன, தொடர்ந்து கட்டைவிரல் இயக்கப்படும் வேளையில் கீல்வாத நிலைக்கு தள்ளப்பட்டு வலியையும் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்மார்ட்போன் எந்த அளவு நன்மைகளை தருகிறதோ அதை விட பல மடங்கு தீமைகளையும் கக்குகின்றன. ‘ஸ்மார்ட்போன் தம்ப்’ கட்டைவிரலை வளைக்கும் தசைநூலில் வீக்கத்தை ஏற்படுத்தி மூட்டுகளை தளர்வானதாக்குறது என மயோ கிளினிக்கின் உயிரியல்மருத்துவ பொறியியலாளர் குழு தெரிவித்துள்ளது. கைகள் மற்றும் மணிக்கட்டுக்கு கொடுக்கும் அழுத்தத்தை குறைப்பதன் மூலம் ‘ஸ்மார்ட்போன் தம்ப்’- ஐ கட்டுப்படுத...

டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

Image
வேகமாக பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடன் அடுத்த வாரம் கலந்துரையாடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜயவிக்ரம தெரிவித்தார். இந்த சூழ்நிலை தொடர்பில் ஏனைய நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சுகாதார அமைச்சினால் மட்டும் தனியாக டெங்கு ஒழிப்பை மேற்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பு , கம்பஹா, களுத்துறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, குருநாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக சுமார் 90 பேர் உயிரிழந்துள்ளனர். -News1st

ஒரு மணி நேரத்தில் 4 பாலியல் குற்றங்கள்: என்ன நடக்கிறது இந்தியாவில்?

Image
ஆசிஃபாவிற்கு நீதி கிடைக்கும் முன்னரே இந்தியாவில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 4 பாலியல் குற்றங்கள் இடம்பெறுவதாக அதிர்ச்சித் தகவல் வௌியாகியுள்ளது. தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில், ஒரு மணி நேரத்தில் இந்தியாவில் 4 பாலியல் குற்றங்கள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2016 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 3,38,954 பாலியல் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இது 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.9 வீதமான அதிகரிப்பைக் காட்டுகின்றது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தெரிந்தவர்களாலேயே அதிகக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தர பிரதேசம் முதலிடம் வகிப்பதுடன், மேற்கு வங்கம், மராட்டியம் ஆகியன அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகம் 19 ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், சிறுமி ஆசிஃபாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நீதி கோரியும் திருவாரூரில் இன்று மாபெரும் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் தலைமை தபால் அலுவலகத்திற்கு முன்னால் திரண்ட மக்கள் போராட்டத்தில் ஈட...

இணையத்தளங்களில் வௌியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்கள், வீடியோக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு: IWF

Image
இணையத்தளங்களில் வௌியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்கள் மற்றும் வீடியோக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக Internet Watch Foundation அதிர்ச்சித் தகவல் ஒன்றை வௌியிட்டுள்ளது. Internet Watch Foundation என்ற அமைப்பானது (IWF) இணையத்தளங்களில் பதிவு செய்யப்படும் செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்களை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டது. அவை குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவற்றை நீக்கும் அதிகாரம் கொண்டவை. இந்நிலையில், IWF அமைப்பு வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையத்தளங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு குழந்தைகளின் ஆபாச வீடியோக்களின் 78 ஆயிரம் URL இருந்ததாகவும் அது தற்சமயம் 37 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், வன்புணர்வு மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அடங்கிய வீடியோக்கள் 33 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுபற்றி IWF அமைப்பின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளதாவது, குற்றவாளிகள் மி...