டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

வேகமாக பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடன் அடுத்த வாரம் கலந்துரையாடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜயவிக்ரம தெரிவித்தார்.
இந்த சூழ்நிலை தொடர்பில் ஏனைய நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சினால் மட்டும் தனியாக டெங்கு ஒழிப்பை மேற்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு , கம்பஹா, களுத்துறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, குருநாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக சுமார் 90 பேர் உயிரிழந்துள்ளனர்.
-News1st

Comments

Popular posts from this blog

*ரமழான் நோன்பின் சிறப்புகள்*

தெரிந்து_கொள்வோம் இலங்கை பற்றி.....

கணவன் மனைவி உறவு பற்றிய தகவல்!