மாகாண சபைத் தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கு எதிர்பாக்கிறோம்: மஹிந்த தேசப்பிரிய!

மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறினார்.

தேர்தலை புதிய முறையில் நடத்துவதாக இருந்தால், அதற்கிணங்க அதிகாரிகளின் பொறுப்புகளை வரையறுத்தல் உள்ளிட்ட விடயங்களை தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு தயாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பழைய முறையில் தேர்தல் நடத்தப்பட்டால், அதற்கான வரைவு – தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

“இந்த நிலையில் தேர்தலை நடத்துவதற்கான செயற்பாடுகளை பிரதமர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு மேற்கொண்டு வருகிறது.

எனவே ஜனவரியில் தேர்தலை நடத்த முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

*ரமழான் நோன்பின் சிறப்புகள்*

தெரிந்து_கொள்வோம் இலங்கை பற்றி.....

கணவன் மனைவி உறவு பற்றிய தகவல்!