ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் மட்/பாலமுனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் மைய்யவாடி மனித நேயம் பேணும் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது!
01/03/2019
மட்டக்களப்பு
மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா
நகரில் பதிவு செய்யப்பட்டு மிக சிறப்பாக இயங்கிவரும் ஸ்டார் இளைஞர் சமூக சேவை
அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மனித நேயம் பேனும் பாரிய சிரமதானப் பணி நேற்று
01.03.2019 வெள்ளிக்கிழமை மட்/பாலமுனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் மைய்யவாடியில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் தலைவர் எம்.எச்.ஏ றஸீத் தலைமையில் இடம்பெற்றது.
காலை
06.30 மணியிலிருந்து 10.00
மணிவரை
இடம்பெற்ற இவ் சிரமாதன நிகழ்வில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் செயலாளர்
ஆர்.ஆர்.எம்.ஹாதீ, பொருளாளர் எம்.ஐ.எம்.மபாஸ் மற்றும் அமைப்பு உறுப்பினர்கள் உட்பட
பாலமுனை பிரதேச பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இம்
மனித நேயம் பேனும் பாரிய சிரமதானத்தின் மூலம் முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் மைய்யவாடியின்
முன்
நுழைவாயில், ஜனாஸாக்கள் கொண்டு செல்லும் வழி, ஜனாஸா அடக்கம் செய்யும் பகுதி உட்பட
பல இடங்கள் துப்பரவு செய்யப்பட்டன.
குறித்த
ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி
பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்களில் பாரிய சிரமாதனப் பணிகள், சமூக
விழிப்புணர்வு கருத்தரங்குகள் செய்து வருவதோடு மட்டுமன்றி தமிழ் முஸ்லிம்
மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு உதவிகளையும் இன நல்லுறவு பேணும்
வகையில் பல்வேறு சமூகப்பணிகளையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






























Comments
Post a Comment