“வட்டியில் இருந்து நமது குடும்பத்தை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு நடாத்திய பெண்களுக்கான வட்டி பற்றிய சமூக விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

“வட்டியில் இருந்து நமது குடும்பத்தை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு நடாத்திய பெண்களுக்கான வட்டி பற்றிய சமூக விழிப்புணர்வுக் கருத்தரங்கு!
-ஊடகப்பிரிவு
ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பெண்களுக்கான வட்டி

















பற்றிய சமூக விழிப்புணர்வுக் கருத்தரங்கு“வட்டியில் இருந்து நமது குடும்பத்தை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் கடந்த 29/03/2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:30 மணிக்கு பாலமுனை மட்/அலிகார் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் தலைவர் எம்.எச்.ஏ.ரஷீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் ஆலோசகர், கைத்தொழில் போதன ஆசிரியர் என்.எம்.எம் சப்ரி (B.A) அவர்களினால் ““வட்டியில் இருந்து நமது குடும்பத்தை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் சிறப்புரை இடம்பெற்றது. பின்னர் வட்டியின் விபரீதங்கள் தொடர்பான விழிப்புணர்வு வீடியோ காட்சிகள் திரையில் காண்பிக்கப்பட்டது. இறுதியாக வட்டி தொடர்பான சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் கேள்வி பதில் நிகழ்ச்சியுடன் இந்நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றது.
குறித்த ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் பதிவு செய்யப்பட்டு மனித நேயமும் இன நல்லுறவும் பேணும் வகையில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

*ரமழான் நோன்பின் சிறப்புகள்*

தெரிந்து_கொள்வோம் இலங்கை பற்றி.....

கணவன் மனைவி உறவு பற்றிய தகவல்!