Posts

Showing posts from January, 2019

நாளாந்தம் டெங்கு நோயாளர்கள் பதிவு

Image
நாளாந்தம் 500 முதல் 600 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,743 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியநிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், யாழ். மாவட்டத்திலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற வானிலையைத் தொடர்ந்தே, டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவியுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

“போதையற்ற குடும்ப சூழலை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு நடாத்திய போதை ஒழிப்புக் கருத்தரங்கு!

Image
முழு நாட்டுக்கும் சவாலாக உள்ள போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டத்தில் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாடசாலை மாணவ, மாணவிகளை போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் பங்குதாரர்களாக மாற்றும் வகையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரத்தை முன்னிட்டு ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த போதை ஒழிப்புக் கருத்தரங்கு “போதையற்ற குடும்ப சூழலை உருவாக்குவோம்”  எனும் தொனிப்பொருளில் கடந்த  25/01/2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:30 மணிக்கு கர்பலா நகர் அல் மனார் வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் தலைவர் எம்.எச்.ஏ.ரஷீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக காத்தான்குடி மீடியா போரம் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன்(JP) மற்றும் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் ஆலோசகர்களான என்.எம்.எம் சப்ரி மற்றும் ஏ.எல்.எம்.இர்ஷாத்(JP) மற்றும் அமைப்பின் செயலாளர் ஆர்....

ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு நடாத்தும் மாபெரும் போதை ஒழிப்புக் கருத்தரங்கு!

Image
முழு நாட்டுக்கும் சவாலாக உள்ள போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டத்தில் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாடசாலை மாணவ, மாணவிகளை போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் பங்குதாரர்களாக மாற்றும் வகையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வக ையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரத்தை முன்னிட்டு எமது அமைப்பினால் 25/01/2019 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 4:00 மணிக்கு கர்பலா நகர் அல் மனார் வித்தியாலய பிரதான மண்டபத்தில் பாடசாலை மாணவர்களையும் பெற்றோர்களையும் இணைத்து “போதையற்ற குடும்ப சூழலை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றினை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இக் கருத்தரங்கில் போதை பொருள் பாவனையின் விபரீதங்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் வீடியோ காட்சி களுடன் தெளிவுபடுத்தப்படவுள்ளது. எனவே இம் மாபெரும் போதை ஒழிப்பு சமூக விழிப்புணர்வுக் கருத்தரங்கில் தமிழ், முஸ்லிம் அனைத்து மாணவர்களையும் பெற்றோர்களையும் கலந்து கொண்டு ...

ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் ஆறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய நிருவாக சபை தெரிவும் இராப்போசன நிகழ்வும்

Image
எமது அமைப்பின் செயற்பாடுகளைமேலும் மெருகூட்டும் வகையிலும்;; புதிய நிருவாகம் தெரிவு செய்து புத்துணர்வுடன் இயங்கும் வகையிலும் அங்கத்தவர்களுக்கான பொதுக்கூட்டம் 04.01.2019 நேற்று வெள்ளிக்கிழமை மாலை 8:00 மணிக்கு அமைப்பு உறுப்பினர் சகோதரர் றிபாஸ் அவர்களின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் போது புதிய நிருவாக சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரம் பின்வருமாறு. A.ரஷீத் (தலைவர்) M.நபீல் (உப தலைவர்) M.ஹாதி (செயலாளர்) M.நுஷைர் (உப செயலாளர்) M.மபாஸ்(பொருளாளர்) M.றிபாஸ் (நிருவாக சபை உறுப்பினர்) M.அஹ்ஸன் (நிருவாக சபை உறுப்பினர்) நூறுல்ஹக் (நிருவாக சபை உறுப்பினர்) M.அகீல் (நிருவாக சபை உறுப்பினர்) மொஹமெட் அலி (நிருவாக சபை உறுப்பினர்) M.அஸ்ஹர் (நிருவாக சபை உறுப்பினர்) ஆகியோர் புதிய நிருவாக சபைக்கு தெரிவு செய்யப்பட்டனர். இந்நிகழ்வின் போது பதவிகளை பொறுப்பேற்ற உறுப்பினர்கள் இந்த அமானிதமான பொறுப்பை அல்லாஹ்வை சாட்சியாக வைத்தும் இந்த அமைப்புடைய யாப்பு சட்டங்கள் மற்றும் கொள்கை கோட்பாட...