ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு நடாத்தும் மாபெரும் போதை ஒழிப்புக் கருத்தரங்கு!
முழு நாட்டுக்கும் சவாலாக உள்ள போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டத்தில் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவ, மாணவிகளை போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் பங்குதாரர்களாக மாற்றும் வகையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரத்தை முன்னிட்டு எமது அமைப்பினால் 25/01/2019 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 4:00 மணிக்கு கர்பலா நகர் அல் மனார் வித்தியாலய பிரதான மண்டபத்தில் பாடசாலை மாணவர்களையும் பெற்றோர்களையும் இணைத்து “போதையற்ற குடும்ப சூழலை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றினை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இக் கருத்தரங்கில் போதை பொருள் பாவனையின் விபரீதங்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் வீடியோ காட்சி களுடன் தெளிவுபடுத்தப்படவுள்ளது.
எனவே இம் மாபெரும் போதை ஒழிப்பு சமூக விழிப்புணர்வுக் கருத்தரங்கில் தமிழ், முஸ்லிம் அனைத்து மாணவர்களையும் பெற்றோர்களையும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி!
-ஊடகப்பிரிவு

Comments
Post a Comment