“போதையற்ற குடும்ப சூழலை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு நடாத்திய போதை ஒழிப்புக் கருத்தரங்கு!
முழு நாட்டுக்கும் சவாலாக உள்ள போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டத்தில் பாடசாலை மாணவர்கள் தொடர்பில்
விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவ, மாணவிகளை போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் பங்குதாரர்களாக மாற்றும் வகையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரத்தை முன்னிட்டு ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த போதை ஒழிப்புக் கருத்தரங்கு “போதையற்ற குடும்ப சூழலை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் கடந்த 25/01/2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:30 மணிக்கு கர்பலா நகர் அல் மனார் வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் தலைவர் எம்.எச்.ஏ.ரஷீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக காத்தான்குடி மீடியா போரம் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன்(JP) மற்றும் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் ஆலோசகர்களான என்.எம்.எம் சப்ரி மற்றும் ஏ.எல்.எம்.இர்ஷாத்(JP) மற்றும் அமைப்பின் செயலாளர் ஆர்.ஆர்.எம்.ஹாதீ மற்றும் பொருளாளர் எம்.ஐ.எம்.மபாஸ் மற்றும் அமைப்பு உறுப்பினர்கள் உட்பட தமிழ், முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் ஆலோசகர் என்.எம்.எம் சப்ரி அவர்களினால் “போதையற்ற குடும்ப சூழலை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் சிறப்புரை இடம்பெற்றது. பின்னர் அதிதி உரையினை காத்தான்குடி மீடியா போரம் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன்(JP) நிகழ்த்தினார்.
குறித்த ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் பதிவு செய்யப்பட்டு மனித நேயமும் இன நல்லுறவும் பேணும் வகையில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-ஊடகப்பிரிவு
-ஊடகப்பிரிவு










Comments
Post a Comment