ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் ஆறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய நிருவாக சபை தெரிவும் இராப்போசன நிகழ்வும்
















எமது அமைப்பின் செயற்பாடுகளைமேலும் மெருகூட்டும் வகையிலும்;; புதிய நிருவாகம் தெரிவு செய்து புத்துணர்வுடன் இயங்கும் வகையிலும் அங்கத்தவர்களுக்கான பொதுக்கூட்டம் 04.01.2019 நேற்று வெள்ளிக்கிழமை மாலை 8:00 மணிக்கு அமைப்பு உறுப்பினர் சகோதரர் றிபாஸ் அவர்களின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் போது புதிய நிருவாக சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரம் பின்வருமாறு.
A.ரஷீத் (தலைவர்)
M.நபீல் (உப தலைவர்)
M.ஹாதி (செயலாளர்)
M.நுஷைர் (உப செயலாளர்)
M.மபாஸ்(பொருளாளர்)
M.றிபாஸ் (நிருவாக சபை உறுப்பினர்)
M.அஹ்ஸன் (நிருவாக சபை உறுப்பினர்)
நூறுல்ஹக் (நிருவாக சபை உறுப்பினர்)
M.அகீல் (நிருவாக சபை உறுப்பினர்)
மொஹமெட் அலி (நிருவாக சபை உறுப்பினர்)
M.அஸ்ஹர் (நிருவாக சபை உறுப்பினர்)
ஆகியோர் புதிய நிருவாக சபைக்கு தெரிவு செய்யப்பட்டனர். இந்நிகழ்வின் போது பதவிகளை பொறுப்பேற்ற உறுப்பினர்கள் இந்த அமானிதமான பொறுப்பை அல்லாஹ்வை சாட்சியாக வைத்தும் இந்த அமைப்புடைய யாப்பு சட்டங்கள் மற்றும் கொள்கை கோட்பாடுகளை மதித்தும் இந்த புதிய நிருவாக சபையில் இன்ஷா அல்லாஹ் அமைப்புடைய அனைத்து செயற்பாடுகளிலும் மிகவும் சிறந்த முறையில் அற்பணிப்போடு செயற்படுவேன் என்ற உறுதிமொழியை சபையோர் முன்னிலையில் அளித்தனர். அதைதொடர்ந்து அமைப்பின் எதிகால செயத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இறுதியாக அவசரக் குழு மற்றும் பொதுக்குழுக்கள் தெரிவு செய்யப்பட்டதோடு இராப்போசன நிகழ்வுடன் கூட்டம் நிறைவுற்றது.
-ஊடகப்பிரிவு

Comments

Popular posts from this blog

*ரமழான் நோன்பின் சிறப்புகள்*

தெரிந்து_கொள்வோம் இலங்கை பற்றி.....

கணவன் மனைவி உறவு பற்றிய தகவல்!