"ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு" மேற்படி எமது அமைப்பானது மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று ஆரயம்பதி பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட கர்பலா நகரில் 02/11/2012 ம் ஆண்டு ஆரபிக்கப்பட்டு (Regd.No:DS/MP/SS/NGO/42) பதிவு செய்யப்பட்டு சமூக மற்றும் கல்வி விடயங்களை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு சமூக சேவை அமைப்பாகும் . எமது அமைப்பின் சமூக சேவையானது இன, மத, ஊர் வேறுபாடின்றி மனித நேயம் பேணி அனைவரையும் இணைத்ததாக செயற்பட்டு வருகிறது. இந்த அமைப்பு எவ்வித அரசியல் கட்சிகளையோ வேறு சமூக அமைப்புக்களையோ சாராது தனி இளைஞர் அமைப்பாக செயற்பட்டு வருகிறது. எமது அமைப்பு கர்பலா நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் தனது சேவைகளை தற்போது முன்னெடுத்து செய்து வருகின்றது. அந்த வகையில் எமது அமைப்பு இதுவரையில் செய்த சேவைகளுள் குறிப்பிடத்தக்கவைகளாக.. கர்பலா நகர் வரலாற்றில் முதன்முறையாக வறிய மாணவர்களுக்கான இலவச பிரத்தியோக வகுப்புக்களை ஆரம்பித்து எமது அலுவலகத்தில் அமைப்பு உறுப்பினர்களைக்கொண்டு நடாத்திமை. கர்பலா நகர் அல்-மனார் வித்தியாலயம், கீச்சான்பள்ளம் மீராமக்காம் ஜும்ஆ பள்ளிவாயல் வளாகம...