இலங்கையில் வருடாந்தம் நிகழும் மரணங்களின் சுமார் 75% தொற்று நோய் காரணமாக நிகழ்கின்றது.
மொத்த சனத்தொகையில் சுமார் 72.5%மானோர் மரக்கறி மற்றும் பழங்கள் தேவையான அளவு உட்கொள்வதில்லையென்பதும் சுமார் 44% பெண்கள் போதுமான அளவு உடற்பயிற்சியில் ஈடுபடாமை தெரியவந்துள்ளது. இந்த நிலைமையினை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையொன்றை பின்பற்றுவதற்கு சுகாதாரம் தொடர்பில் சிறந்த அறிவியிருப்பது அத்தியாவசியமானதாகும்.
ஆயினும் நடைமுறையிலுள்ள பாடசாலை பாட சிபாரிசுகளில் 6ம் ஆண்டிலிருந்து 9ம் ஆண்டிற்கு மாத்திரம் "சுகாதாரம்" கட்டாய பாடமொன்றாக கற்பிக்கப்படுவதோடு, O/L பரீட்சைக்கு இந்த பாடமானது கட்டாய பாடமொன்றல்ல.
இதற்கமைவாக O/L பரீட்சையில் கட்டாய பாடமொன்றாக சுகாதார பாடத்தை அறிமுகப்படுத்தும் பொருட்டு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு 2023ம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள அடுத்த பாடசாலை பாடத்திட்டத்திற்கான திருத்தத்தின் போது O/L பரீட்சை வரை சுகாதாரம் மற்றும் உடற்கல்வி பாடத்தை கட்டாய பாடமொன்றாக பாடசாலைகளில் கற்பிக்க வேண்டுமென கல்வி சீர்திருத்த நிபுணர் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள யோசனையையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு பாடசாலை பாடத்திட்டங்களின் திருத்தம் தொடர்பிலான கொள்கை தீர்மானமெடுக்கும் அதிகாரத்தினை கொண்டுள்ள தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபாரிசுகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் இந்த யோசனையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 05- June-2018 அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
-Eastern Youth
Comments
Post a Comment