மனிதநேய பணியில் இணைய விரும்புவோருக்கு ஓர் சந்தர்ப்பம்!!!


"ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு"
மேற்படி எமது அமைப்பானது மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று ஆரயம்பதி பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட கர்பலா நகரில் 02/11/2012 ம் ஆண்டு ஆரபிக்கப்பட்டு
(Regd.No:DS/MP/SS/NGO/42) பதிவு செய்யப்பட்டு சமூக மற்றும் கல்வி விடயங்களை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு சமூக சேவை அமைப்பாகும்
.
எமது அமைப்பின் சமூக சேவையானது இன, மத, ஊர் வேறுபாடின்றி மனித நேயம் பேணி அனைவரையும் இணைத்ததாக செயற்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு எவ்வித அரசியல் கட்சிகளையோ வேறு சமூக அமைப்புக்களையோ சாராது
தனி இளைஞர் அமைப்பாக செயற்பட்டு வருகிறது.
எமது அமைப்பு கர்பலா நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் தனது
சேவைகளை தற்போது முன்னெடுத்து செய்து வருகின்றது.
அந்த வகையில் எமது அமைப்பு இதுவரையில் செய்த சேவைகளுள் குறிப்பிடத்தக்கவைகளாக..
 கர்பலா நகர் வரலாற்றில் முதன்முறையாக வறிய மாணவர்களுக்கான இலவச
பிரத்தியோக வகுப்புக்களை ஆரம்பித்து எமது அலுவலகத்தில் அமைப்பு
உறுப்பினர்களைக்கொண்டு நடாத்திமை.
 கர்பலா நகர் அல்-மனார் வித்தியாலயம், கீச்சான்பள்ளம் மீராமக்காம் ஜும்ஆ பள்ளிவாயல் வளாகம், ஒல்லிக்குளம் மஸ்ஜிதுல் ஆயிஷா பள்ளிவாயல் வளாகம், ஒல்லிக்குளம் பாக்கியதுஸ் ஸாலிஹாத் ஜும்ஆ பள்ளிவாயல் வளாகம், கர்பலா நகரில் அமைந்துள்ள பொலிஸ் நிலையம், காத்தான்குடி-06 ஹைராத் வித்தியாலயம், கர்பலா ஜாமிஉல் மனார் பள்ளிவாயல், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை, காத்தான்குடி மட்/பிர்தவ்ஸ் வித்தியாலயத்தின் மைதானம், ஆரையம்பதி செல்வா நகர் சக்தி பாலர் பாடசாலை, காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லம், கர்பலா நகர் உப தபால் நிலைய வளாகம், பாலமுனை பிரதேச வைத்தியசாலை, கர்பலா நகரில் அமைந்துள்ள எமது அலுவலகத்தின் முன்னுள்ள வீதி போன்ற இடங்களில், மனித நேயம் பேணும் பாரிய சிரமதானம் மூலம்
எமது உறுப்பினர்களைக்கொண்டு துப்பரவு செய்யப்பட்டமை
 கர்பலா நகர் அண்டிய தமிழ் வறிய மாணவர்களுக்கான இலவச பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வை அந்த பகுதிக்கு சென்று நடாத்தியமை.
 கர்பலா நகர் வறிய மாணவர்களுக்கான இலவச பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வு அல்-மனார் வித்தியாலய மாநாட்டு மண்டபத்தில் நடாத்தியமை.
 மாணவர்களுக்கான இலவச குர்ஆன் மத்ரஸா வகுப்பு நடாத்தியமை.
 பெற்றோர்களுக்கான கல்விக் கருத்தரங்கு நடாத்தியமை.
 கர்பலா நகரில் பெண்களுக்ககான சமூக விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடாத்தியமை.
 காத்தான்குடி அல்-உமர் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வுக்கான மண்டப
ஒழுங்கமைப்பு செய்து கொடுத்தமை.
 கர்பலா அல்-மனார் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழாவுக்கு எமது
அமைப்பு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியமை.
 காத்தான்குடி மட்/பிர்தவ்ஸ் வித்தியாலய விளையாட்டு நிகழ்வுக்கான
மைதான ஒழுங்கமைப்பு செய்து கொடுத்தமை.
 இலவச பிரத்தியேக வகுப்பின் வருட பூர்த்தியை முன்னிட்டு கலை
நிகழ்வும், சான்றிதழ் வழங்கும் விழாவும் எமது அலுவலக வளாகத்தில்
நடாத்தியமை.
 அனர்த்தத்தின் போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கர்பலா நகர் மக்களுக்கு நிவாரண உதவிகள்
வழங்கி வைக்கப்பட்டுடமை.
 இன நல்லுறவை பேணும் வகையில் கர்பலாவில் (ஆரையம்பதி-கிழக்கு)
வசிக்கும் தமிழ் குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி
வைவைக்கப்பட்டமை.
 மழை காலங்களில் பாடசாலை, வைத்தியசாலை போன்ற பொது இடங்களில் பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதானங்கள் செய்தமை.
இவ்வாறான அனைத்து சேவைகளையும் செய்து வரும் எமது அமைப்பானது இதை இலவசமாக செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. எமது அமைப்பு கர்பலாவை மையமாகக் கொண்டு இயங்கி வரக் காரணம் அங்குள்ள மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாலும் அடிப்படை வசதிகள் இல்லாதிருப்பதாலும் முக்கிய தேவையான சிறுவர்களின் கல்வி நிலை மிக மோசமாக இருப்பதாலும் அதனை அறிந்த எங்கள் அமைப்பு அந்நிலையை மாற்றுவதற்காக சகல வழிகளிலும் போராடி வருகிறது.
எமது அமைப்பு எந்தவித சுய இலாபங்களுக்காகவோ அல்லது வேறு எந்த பிரதிபலன்களையும் எதிர்பாராது இறைவனிடம் மட்டுமே இதற்கான நற்கூலிகளை எதிர்பார்த்து அமைப்பு உறுப்பினர்களின் சொந்த பொருளாதரத்தில்தான் இந்த சேவைகளை செய்து வருகின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
மேலும் எமது சேவைகளை தொடர்வதற்கு அதற்குரிய போதிய பொருளாதாரம் மற்றும் உறுப்பினர்கள் இன்மையால் பல அசெளகரியங்களை முகங்கொடுத்து வருகின்றோம். எனவே இந்த சமூகப் பணியை தொடர்ச்சியாக முன்னெடுத்து செய்வதற்கு சமூக ஆர்வம் உள்ள சகோதரர்கள் எம்மோடு இணைந்து கொள்ளுமாறு அல்லாஹ்வின் பெயரால் அழைக்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

TEL: +94775418638/+94772381065

E-mail: syssasrilanka2012@gmail.com

Twitter: @SYSSAnews

Facebook: SyssaNews Srilanka

Web:  www.syssasrilanka.blogspot.com

Comments

Popular posts from this blog

*ரமழான் நோன்பின் சிறப்புகள்*

தெரிந்து_கொள்வோம் இலங்கை பற்றி.....

கணவன் மனைவி உறவு பற்றிய தகவல்!