முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2 ஆம் தவணை விடுமுறை!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று  (17) நிறைவடைகிறது.

அதற்கமையஇ இன்று  (17) வெள்ளிக்கிழமை இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட விடுமுறைக்காக மூடப்படும் முஸ்லிம் பாடசாலைகள் யாவும்இ எதிர்வரும் ஓகஸ்ட் 27 ஆம் திகதி திங்கட்கிழமை மூன்றாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நோன்பை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகள் யாவும்இ இரண்டாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறைக்காகஇ கடந்த மே மாதம் 11 ஆம் திகதி மூடப்பட்டு ஜூன் 18 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டது.

அதனையடுத்துஇ இன்றைய  (17) முஸ்லிம் மாணவர்களுக்கு இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இவ்விடுமுறை நாட்களுக்குள்இ ஹஜ்ஜுப் பெருநாள் தினமும் (22) உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆயினும்இ கடந்த ஓகஸ்ட் 06 ஆம் திகதி ஆரம்பமான க.பொ.த. உயர் தர பரீட்சை மத்திய நிலையங்களாக செயற்படும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏற்கனவே விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பரீட்சைகள் எதிர்வரும் செப்டெம்பர் 01 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

-MSM. NOORDEEN

Comments

Popular posts from this blog

*ரமழான் நோன்பின் சிறப்புகள்*

தெரிந்து_கொள்வோம் இலங்கை பற்றி.....

கணவன் மனைவி உறவு பற்றிய தகவல்!