பெற்றோர்களே! இது உங்கள் கடமையும் தேவயும் என்பதை மறந்து விடாதீர்கள்!
குழந்தைகள் அழுகிறது அடம்பிடிக்கிறது என்பதட்காக நாங்கள் கையில் போனை கொடுப்பதுண்டு. சில நேரங்களில் பாட்டு அல்லது game ஐ ஒன் பண்ணி கொடுப்பது. இப்படியான விடயங்கள் எமக்கு நேர இடைவெளிகளை தந்து எம் வேலைகளை முடிப்பதட்கோ , இளைப்பாறுவதாட்கோ உதவும் அதே நேரம் குழந்தைகளின் மன நிலையை பெரிதும் மாற்றி விடுகின்றன.
அழுதால் எமக்கு கிடைத்து விடும் என்னும் ஒரு புடிவாதத்திட்கு அவர்களை உட் தள்ளி விடும் இது காலப் போக்கில் அவர்கள் வளர்ச்சியில் பெரிதும் பல பாதிப்புகளை உருவாக்கி மன நிலையை கட்டாயப் படுத்தும் ஒரு வழிகாட்டலை நாமே உருவாக்கி விடுகின்றோம். இதன் விளைவுகளும் எம்மை , எம் குழந்தைகளை கொஞ்சம் கொஞ்சமாக பின் தள்ளி விடுகின்றன.
எதிர் காலம் நோக்கி எம் சிந்தனைகள் இருப்பதில்லை . இப்போதைக்கி என்று எல்லா விடயங்களையும் சமாளித்து விடுகிறோம் பல பாதிப்புகளை தரும் இந்த ஒரு விடயம் மட்டுமல்ல பல விடயங்களை நாம் சரியாக கையாளுவதில்லை.
Comments
Post a Comment