முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவித்தல்; இனிமேல் இது கட்டாயமானது!

இலங்கையில் முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான விசேட உத்தரவுகள் வர்த்தமானிமூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ லங்காவின் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவின் கையெழுத்துடன் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் இந்த பணிகளுக்காக வாகன அனுமதிப் பாத்திரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விசேட ஏற்பு இசைவுகளின் படி விசேட பரிந்துரைகள் தவிர்ந்த அதன் உத்தரவுக்காக எந்தவொரு நபரினாலும் பொது சேவைக்கு முச்சக்கர வண்டி செலுத்தமுடியாது.

இந்த உத்தரவின் அடிப்படையில் சிறப்பு அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்கும் ஒவ்வருவரும் 35 வயதிற்கு குறையாததாகவும் 70 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

அத்தோடு முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான ஓட்டுநர் அனுமதி பாத்திரத்தை பெற்ற பின்னர் ஆக குறைந்தது 2 வருட காலத்துக்கு வாகனத்தை செலுத்துவதற்கான அனுபவம் இருக்க வேண்டும்.

ஏற்பு இசைவுகளுக்காக பெற்றுக்கொள்ளும் வைத்திய சான்றிதழ் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் தயாரிக்கப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்ட மற்றும் முன்னெடுக்கப்படும் பயிற்சிக்கான கற்கைநெறி ஒன்று அல்லது ஆணையாளர் நாயகத்தினால் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றினால் அனுமதிக்கப்பட்ட கற்கை நெறிக்கான சான்றிதழ், நாட்டின் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிக்கான பதிவு இல்லாமையை உறுதி செய்யும் பொலிஸ் அறிக்கை மற்றும் 2000 கட்டணத்துடன் அதனை மோட்டார் வாகன ஆணையாளர் நாயகத்துடன் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
-Lanka Sun News

Comments

Popular posts from this blog

*ரமழான் நோன்பின் சிறப்புகள்*

தெரிந்து_கொள்வோம் இலங்கை பற்றி.....

கணவன் மனைவி உறவு பற்றிய தகவல்!