ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு நடாத்திய பெண்களுக்கான டெங்கு பற்றிய மாபெறும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!


மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு சமூக பணிகளை செய்துவரும் கர்பலா நகர் ஸ்டார் இளைஞர் சமூக சேவை  அமைப்பு ஏற்பாடு செய்திருந்த  பெண்களுக்கான டெங்கு பற்றிய மாபெறும்  விழிப்புணர்வுக் கருத்தரங்கு  16-11-2018 வெள்ளிக்கிழமை மாலை  மட்-கர்பலா நகர் அல்மனார் வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை  அமைப்பின் தலைவர் எம்.எஷ்.ஏ.றஸீத் தலைமையில் இடம்பெற்றது.  
இந்த கருத்தரங்களில் ஆரையம்பதி பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி
Dr. ரமேஸ் மற்றும் மேற்பார்வை  சுகாதார பரிசோதகர் புலேந்திரகுமார் மற்றும்   பொது சுகாதார பரிசோதகர் கணேஸன் மற்றும் தமிழ், முஸ்லிம் பெண்கள் உட்பட  அமைப்பு உறுப்பினர்கள் என பலரும்  கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில்
டெங்கு பற்றிய பல்வேறு தகவல்கள் வீடியோ காட்சிகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.
-SYSSA MEDIA UNIT




Comments

Popular posts from this blog

*ரமழான் நோன்பின் சிறப்புகள்*

தெரிந்து_கொள்வோம் இலங்கை பற்றி.....

கணவன் மனைவி உறவு பற்றிய தகவல்!