தலைவலியும்... அதற்கான மருந்தும்...
*தலையின் முன் பகுதியில் வலி வந்தால் அதற்கு தூங்குவதே சிறந்த மருந்து,
*கிடைக்கும் நேரத்தில் உறங்கும் சிறிய தூக்கம் நம் உடலில் 4மணி நேரம் சீராக செயல்பட்டு மூளை புத்துணர்ச்சியுடன் இருக்க செய்கிறது,
*தலையின் மேல் பகுதியில் வலி வந்தால், சரியான நேரத்தில் சாப்பிடுவதும், அதிக தண்ணீர் குடிப்பதே சிறந்த மருந்து,
*தலையின் பின் பகுதியில் வலி வந்தால், கண்ணிற்கு ஓய்வின்றி விழித்துக்கொண்டிருப்பதும், மனதில் ஏதாவது சிந்தனையை நினைத்துக்கொண்டு கவலை கொள்வதே காரணம், இதற்கு ஒரே மருந்து மூச்சு பயிற்சியே ஆகும்,
*மூன்று முறை இடது புறமும், மூன்று முறை வலது புறமும், மூச்சை நன்கு இழுத்துவிட்டால், தலைவலி காணாமல் போய்விடும்,
*உடலில் நீர் சத்து குறைந்தால் தலைவலி ஏற்படும், சிலர் இதை சளி பிடிக்கப்போகிறது என்பார்கள்,
*அடிக்கடி தலைவலி வந்தால் கண்களின் பார்வை திறன் குறைகிறது என்று பொருள். உடனே மருத்துவரை காண்பது நல்லது,
*சிலருக்கு தலைவலியும், தோள்பட்டை தசைபிடிப்பும், உடல் வலியும் ஏற்படும் இதற்கு சிறந்த மருந்து உடனே உடல் முழுவதும் குளிப்பதே ஆகும்,
*தலைவலி அதிகமானோர்க்கு அதிக (சத்தம்) அதிக இறைச்சல் கேட்போருக்கே வருகிறது,
*அப்படி நாம் கேட்கும் இறைச்சலில் மூளை எந்த செய்தியை ஈர்ப்பது என தெரியாமல் மூளையின் நரம்பில் ஓர் அழுத்தம் ஏற்படுகிறது, அந்த அழுத்தமே "தலைவலி" என்கிறோம். அதன் விளைவு சிலருக்கு கோபம் வரும். சிலருக்கு அழுகையே வரும்...
*தலைவலி வரும் நேரத்தில் மாத்திரையை தவிர்த்து, அமைதியான சூழலில் சுடு தண்ணீர் குடித்தால் 2நிமிடத்தில் தலைவலி பறந்துவிடும்,
*தலைவலிக்காக அடிக்கடி காபி குடிப்பது வயிற்றிற்கு அவ்வளவு நல்லதல்ல...
*மிளகு ரசம், மிளகு மற்றும் மஞ்சத்தூள் கலந்த பால், சீரக கசாயம், சுடு தண்ணீர், இவைகளை கொண்டே தலைவலியை விரட்டிவிடலாம்.
*தலைவலி, உடல் வலி போன்ற பிரச்சினைக்கு உடனே மாத்திரையை சாப்பிடும் பழக்கம் கூடாது,
*மாத்திரை என்பது நோயை குணப்படுத்தாது, அதை அவ்வப்போது நிறுத்தி வைக்கும்.
Comments
Post a Comment