பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் அற்புதமான பயன்களும்!
மாப்பிளை சம்பா : உடலை பலபடுத்தும் மாமருந்து . திருமணதிற்கு தயாராகும் மணமகன்கள் தொடர்ச்சியாக 41 நாட்கள் இதன் நீராகாரத்தை உண்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.
கவுணி அரிசி : புது மாப்பிள்ளைகான விருந்துணவு அரிசி. இதன் கஞ்சி குடித்தால் குதிங்கால் வலி நீங்கும் .
சிவப்பு கவுணி அரிசி : புது மண தம்பதியர் உண்ண வேண்டிய அரிசி . இது ஒரு பலகார அரிசி. இட்லி,ஆப்பம், பணியாரம் செய்ய ஏதுவானது . குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி தரும் .கருவில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகும் .
சேலம் சன்னா : கர்ப்பகாலத்தில் உண்ண வேண்டிய அரிசி . குழந்தை பேரு நன்முறையில் நடக்கும் . களைப்பில்லாமல் வேலை செய்ய உதவும் . இது நாய் கடி விஷத்தை முறிக்கும் .
பூங்காற் அரிசி : மகப்பேறு காலங்களில் உண்ண வேண்டிய அரிசி . தாய்பால் சுரக்கும் .
கட்ட சம்பா அரிசி : நோய் எதிர்ப்பு சக்தி தரும் .
சிங்கினி கார் அரிசி : எல்லா விதமான நோயாளிகளும் உண்ண வேண்டிய அரிசி. உடல் நலம் பெற உதவும் .
இலுப்பைபூ சம்பா அரிசி : சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். மூட்டு வலி,பக்க வாதம் போன்ற நோய்க்கான மருந்து . நரம்பு பிரச்சனையின் மருந்து .
காட்டுயானம் அரிசி : இந்த அரிசியில் காஞ்சி வைத்து கறிவேப்பில்லை போட்டு மூடி வைத்து , மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் . இப்படி தொடர்ச்சியாக செய்தால் புற்றுநோயால் ஏற்படும் புண்கள் ஆறும் . இதுவே புற்று நோய்க்கு மருந்தாக இருக்க வேண்டும் என ஆய்வுகள் நடைபெற்று வருகிறது .
சூரகுருவை அரிசி : நோய் எதிர்ப்பு சக்தி தரும் .
பனங்காட்டு குடவாழை அரிசி : தொழிலாளர்களின் தோழன் இந்த அரிசி . அந்த அளவிற்கு நோய் எதிர்ப்பும், உடல் வலிமையையும் தரும் .
கருடன் சம்பா : நோய் எதிர்ப்பு சக்தி தரும். சாப்பாடு மற்றும் பலகார அரிசி .
கருங்குறுவை அரிசி : இதன் நெல் கரு நிறம். அரிசி செந்நிறம் இது ஒரு மாமருந்து. இந்த அரிசியுடன் மூலிகை மருந்து சேர்த்தால் லேகியம் செய்ய முடியும் . அது யானைக்கால் நோய்க்கான மருந்து . குஷ்டதிற்க்கும் , விஷகடிக்கும் மாமருந்து. உடலை வலுவாக்கும் காயகல்ப சக்தி கொண்டது . இந்த அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஊரவைத்து ஆறுமாதம் கழித்து எடுத்தால் பால் போல் இருக்கும் . இதற்க்கு ‘அன்ன காடி ‘என்று பெயர் .இது காலராவிர்க்கான மருந்து . இது கிரியா ஊக்கியாக உள்ளது .
கார் அரிசி : சர்க்கரை நோய்க்கும், வாதம் சம்பந்தமான நோய்க்கும், கரப்பான் களுக்கும் மருந்தாகும்.
தங்க சம்பா : இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும் , பலகாரத்திலும் சேர்த்து வந்தால் முகம் பொலிவுடன் ஜொலிக்கும். நோய் எதிர்ப்பு திறனும் கொடுக்கும்.
தூயமல்லி அரிசி : மேல குறிப்பிட்ட எல்லா அரிசிகளும் சிவப்பரிசி . கட்ட சம்பா தவிர்த்து . தூய மல்லி அரிசியானது இன்னும் மல்லிகை போல் பளபள வென இருக்ககூடியது .மக்கள் எதிர்ப்பார்க்கும் எல்லா குணங்களும் கொண்ட ஒரு அரிசி . தெவிட்டாத , நோய் எதிர்ப்பு சக்தி தரும் அரிசி .
இந்த பாரம்பரிய அரிசி எதுவும் உரமோ, பூச்சி கொல்லி மருந்தோ இல்லாமலேயே வளரக்கூடியது. மேற்காணும் அரிசி வகைகள் தானாக வளரக்கூடியது . தானே எதிர்ப்பு திறனுடன் வளர்வதால் இந்த அரிசியை உன்னுபவர்களுக்கும் அதே எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வல்லமை கொண்டது .
பாரம்பரிய அரிசி உண்போம் . ஆரோக்கியத்தை பேணி, ஆயுளை அதிகரிப்போம்.
மேற்காணும் அரிசி வகைகள் அனைத்தும் , எல்லா இயற்கை உணவு அங்காடிகளில் கிடைக்கிறது . விலை சற்று அதிகம் . மருத்துவரிடம் கொடுப்பதில் பாதியை விவசாயிக்கும் கொடுக்கலாமே !
பயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்.
Comments
Post a Comment