ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் கர்பலாவில் தந்தை இல்லாத மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு!!

-17.12.2018 /18.12.2018

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் பதிவு செய்யப்பட்டு சிறப்பாக இயங்கிவரும் கர்பலா ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால்
மனித நேயம் பேணும் வகையில் கர்பலா நகரில் வசிக்கும் தந்தை இல்லாத மாணவர்கள் மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களில் உள்ள மாணவர்கள் என 15 மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் நன்மை கருதி இலவச பாடசாலை உபகரணஙகள்
நேற்று 17.12.2018 திங்கக்கிழமை மற்றும் இன்று 18.12.2018 செவ்வாய்க்கிழமை பிற்பகல்  அவர்களுடைய வீடுகளுக்கு சென்று எமது அமைப்பினால் உரிய மாணவ மாணவிகளிடம் கையளிக்கப்பட்டது.

ஒரு சமுதாயத்தின் வெற்றி கல்வியிலேயே தங்கி உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

எமது அமைப்பு மனித நேயம் என்ற உணர்வோடு எம்மால் இம் மாணவர்களின்
கல்வி மேன்பாட்டுக்காக வழங்கிய
ஒரு சிறு பங்களிப்பாக்கும்.

குறித்த ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு மட்டக்களப்பபு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்களில் பாரிய சிரமாதனப் பணிகளை செய்து வருவதோடு மட்டுமன்றி கர்பலா கிராமத்தில் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு பணிகளை செய்து வருவதோடு இன்னும் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே
அல்ஹம்துலில்லாஹ்!!!

(பெண் மாணவிகளின் புகைப்படங்களை அவர்களின் நலனுக்காக தவிர்த்துள்ளோம்)

-ஊடகப்பிரிவு

facebook link:
https://www.facebook.com/profile.php?id=100030451243766

Comments

Popular posts from this blog

*ரமழான் நோன்பின் சிறப்புகள்*

தெரிந்து_கொள்வோம் இலங்கை பற்றி.....

கணவன் மனைவி உறவு பற்றிய தகவல்!